පුත්තලම දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුව දිස්ත්රික් සම්බන්ධීකරන කමිටු සභාපති රාජ්ය පරිපාලන පලාත් සභා සහ පළාත් පාලන අමාත්ය චන්දන අබේරත්න මැතිතුමා සහ සම සභාපතිවරුන් වන වයඹ ආණ්ඩුකාරවර තිස්සවර්ණූරිය, පාර්ලිමේන්තු මන්ත්රි ගයාන් ජානක යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් 2025.09.30 දින දිස්ත්රික් ලේකම් කාර්යාල ශ්රවනාගාරයේ දී රැස්විණි.
මෙහිදී තබ්බෝව අභය භුමිය තුළ මයිලන්කුලම මහසෙන් වැව ප්රතිසංස්කරණය කිරිම,කල්පිටිය ප්රදේශයේ කුකුළු පොහොර භාවිතයෙන් පැනනැගී ඇති පාරිසරික ගැටළුව,නාත්තන්ඩිය විවෘත විශ්ව විද්යාලය සඳහා ඇති ගොඩනැගිලි අවශ්යතාව,තබ්බෝව රක්ෂිතයට අයත් ගල්විල උද්යානය සංචාරක ආකර්ෂණයක් සහිත බැවින් ප්රවේශ විමට අවශ්ය පරිසරය සැකසීම ආදී කරුණු පිළිබඳව සභාපතිවරුන්ගේ විශේෂ අවධානය යොමු විය.
එමෙන්ම පුත්තලම ෆාතිමා බාලිකා විද්යාලයේ ඉඩමේ වපසරිය පුළුල් කිිරීම,උතුරු තොඩුවාව හා මැද තොඩුවාව ග්රාම නිලධාරි වසම්වල ඉස්සන් ගොවිපල සඳහා විදුලිය ලබා ගැනීමට ට්රාන්ස්පෝර 02ක් සවිකිරීම,යෝජිත කල්පිටිය හා පුත්තලම ජල ව්යාපෘතිවලට කලාඔයෙන් ජලය ලබා ගැනීම ආදී කරුණු පිළිබඳව ද පළාත් ආණ්ඩුකාරවරයාගේ අවධානයට ලක්වන ලදි.
ක්ලීන් ශ්රී ලංකා ජාතික වැඩසටහන යටතේ ක්රියාත්මක පාසල් දරුවන් අතර සදාචාරාත්මක වටිනාකම ප්රවර්ධනය කිරීම සඳහා ස්වභාවධර්මය සමඟ අධ්යාපනය, පරිසරය සම්බන්ධ කිරීම හා දරුවන්ගේ ආකල්ප සංවර්ධනය උදෙසා " සොබා සිත් වදුල " පුත්තලම දිස්ත්රික් පාසල් වැඩසටහන සම්බන්ධව ද මෙහිදී සාකච්ඡා කළේය.
තවද මාදම්පේ මරම්බැට්ටිය ප්රදේශයේ පවත්වා ගෙන යන සත්ව ආහාර නිෂ්පාදන කර්මාන්ත ශාලාවෙන් පිටවන දුර්ගන්ධය නිසා සිදුවන පරිසර හානිය හා මහජන පීඩාව,වෙන්නප්පුව නගර නිර්මාණ සැලැස්ම, මාදම්පේ ප්රදේශයේ සිදුවන සිලිකා ,ගොඩවැලි,බොරළු කැණීම් නිසා ඇතිවන පරිසර විනාශය පිළිබඳව කමිටුවේ සාකච්ඡාවට යොමු විය.
එමෙන්ම පසුගිය සම්බන්ධීකරන රැස්වීමේ දී ගනුලැබූ තීන්දු තීරණ පිළිබඳ ප්රගතිය හා දිස්ත්රික්කයේ රාජ්ය ආයතන විසින් ක්රියාත්මක වැඩසටහන්වල ප්රගතිය පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කළේය.
මෙම අවස්ථාවට දිස්ත්රික්කයේ දේශපාලන අධිකාරිය, දිස්ත්රික් ලේකම් වයි.අයි.එම්.සිල්වා මහතා, වයඹ පළාත් ප්රධාන ලේකම් ඉන්දික ඉලංකෝන් මහතා,පළාත් සභා ප්රධානීන් , අතිරේක දිස්ත්රික් ලේකම්(ඉඩම්) චතුරක ජයසිංහ මහතා , ප්රාදේශීය ලේකම්වරු, දිස්ත්රික් සැලසුම් අධ්යක්ෂ චින්තාවිතාන මහත්මිය, දිස්ත්රික්කයේ රාජ්ය ආයතතන ප්රධානීන් සහ නිලධාරීන් සහභාගී වී සිටියහ.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு “பிரஜாசக்தி” திட்டம் குறித்தான அறிவுத்தற் நிகழ்ச்சி.....
கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, கலாச்சார, பொருளாதார, அரச மற்றும் அரசியல் துறைகளில் நவீன மற்றும் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதன் மூலம் கண்ணியமான வாழ்க்கையையும் பாதுகாப்பான நாட்டையும் நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்ப்பாப்பாகும்.
தற்போது, மொத்த மக்கள் தொகையில் அறுவரில் ஒருவர் பல் பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில், 95.3% நபர்கள் கிராமப்புற மற்றும் தோட்டங்ளைச் சார்ந்த மக்களாவர். (2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர தரவு) அதனடிப்படையில், பிரஜாசக்தி திட்டமானது 2030 ஆம் ஆண்டளவில் நாட்டில் பல பரிமாண வறுமையை 5% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வறுமையை ஒழிப்பதற்கான இந்த தேசிய திட்டத்தை செயற்படுத்துவதற்காக சமூக பங்களிப்புடனான குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு அபிவிருத்திக் கட்டமைப்பை நிறுவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “பிரஜாசக்தி” திட்டம் குறித்து புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை அறிவுறுத்தும் நிகழ்வானது சமீபத்தில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் திரு. ரோஷன் ஜயதிலக்க அவர்கள், "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யைக் கட்டியெழுப்பும் முகமாக, கிராமப்புற வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் க்ளீன் ஶ்ரீ லங்கா" ஆகிய மூன்று அணுகுமுறைகளினூடாக செயற்படுத்தப்படும் திட்டங்களுல் வறுமையை ஒழிப்பதற்காக இந்த "பிரஜாசக்தி" தேசிய திட்டமானது செயற்படுத்தப்படுகிறது என்று கூறினார்..
இதன் மூலம், 2030 ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கையையும் பாதுகாப்பான நாட்டையும் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதும், சகல இடங்களிலும் காணப்படக்கூடிய அனைத்து வகையான வறுமையையும் ஒழித்து விடுவது இதன் நோக்கமாகும்.
அதன்படி, 2030 ஆம் ஆண்டளவில், சகல இடங்களிலும் வாழும் அனைத்து மக்களினதும் அதீத வறுமை நிலையினை ஒழிப்பது, தேசிய மட்டத்திலான வரைவிளக்கனங்களுக்கு ஏற்ப அனைத்து வகையான வறுமைநிலைகளிலும் வாழ்பவர்களின் விகிதாசாரத்தை குறைந்தபட்சம் அரைவாசியாக குறைப்பது, சகல மக்கள் தொடர்பாகவும் தேசிய அளவில் பொருத்தமான சமூக பாதுகாப்பு முறைமைகளை செயற்படுத்துவது, பொருளாதார வளங்கள், அடிப்படை சேவைகள், காணி உரிமையும் கட்டுப்பாடும் மற்றும் பிற வகையான சொத்துக்களின் உரிமை, இயற்கை வளங்கள், பொருத்தமான புதிய தொழில்நுட்பங்கள், நுண்நிதி உள்ளிட்ட நிதி சேவைகள் ஆகியவற்றிற்கு சமமான அணுகலை உறுதி செய்வது, காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு ஆளாகுவதைக் குறைத்தல் போன்றன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது என பணிப்பாளர் திரு. அசங்க தயாரத்ன அவர்கள் தெரிவித்தார்.
மேலும், பிரஜா சக்தி தேசிய திட்டமானது பொருளாதார விரிவாக்கம், பொதுமக்கள் பங்கேற்பு, பாதுகாப்பு மற்றும் மனப்பாங்கு விருத்தி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
இந்த அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் முகமாக கொள்கை வகுக்கும் திட்டங்களை அடையாளம் காணுதல், மூலோபாயத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் ஊடாக திட்டங்களைத் வகுத்தல் மற்றும் இயங்கச் செய்தல் ஆகியன இப்பொறிமுறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
இந்தத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு சமூக மேம்பாட்டு சபை (CDC) நிறுவப்படும்.
பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அல்லது அவரது பிரதிநிதி கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் சமூக மேம்பாட்டு சபையின் தலைவராக கருதப்படுவார். இதன் காரணமாக, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அதிகாரங்கள் தானாகவே கிராம அலுவலர் பரிவு வரை இட்டுச் செல்லப்படும்
மேலும், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் சமூக வலுவூட்டற் அலுவலராக அபிவிருத்தி அலுவலர் அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். இது பிரஜாசக்தி தேசிய திட்டத்திற்கு தற்போது சேவையில் இருக்கக்கூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இருக்கக் கூடியவர்களை திறம்பட பயன்படுத்துவதற்கும், அறிவியல் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைமுறையின் கீழ் கிராமப்புற மேம்பாட்டை செயல்படுத்துவதற்கும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அறிவுறுத்தற் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் திரு.ரோஷன் ஜயதிலக, மாவட்ட செயலாளர் திரு. வை.ஐ.எம். சில்வா, மேலதிக மாவட்ட செயலாளர் திரு. சதுரக்க ஜயசிங்க, பணிப்பாளர் திரு. அசங்க தயாரத்ன, பணிப்பாளர் திருமதி. உத்பலா விஜேகோன், உதவிப் பணிப்பாளர் திரு. திலூப அம்பேபிட்டிய, மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவ் அறிவுறுத்தற் நிகழ்ச்சித்திட்டமானது ஜனாதிபதி செயலகத்தின் பிரஜா சக்தி செயலகத்துடன் ஒருங்கிணைந்து மாவட்ட திட்டமிடல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டது.














