“ පොහොසත් රටක්- ලස්සන ජීවිතයක් ” යන තේමාව යටතේ  සමස්ත සමාජයම ආර්ථික, පාරිසරික, සමාජයීය  වශයෙන්  ගැඹුරු පරිවර්තනීය වෙනසක් සඳහා රජය මගින් ක්‍රියාත්මක කරනු ලබන “ ක්ලින් ශ්‍රි ලංකා” ජාතික වැඩසටහන පිළිබඳව පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ නිලධාරින් දැනුවත් කිරීමේ වැඩසටහන පුත්තලම අතිරේක දිස්ත්‍රික් ලේකම් ( පාලන) පුබුදිකා එස් බණ්ඩාර  මහත්මියගේ සම්පත්දායකත්වයෙන් දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවනාගාරයේ දී පැවැත්විණි.

ක්ලින් ශ්‍රි ලංකා වැඩසටහන ආයතනික මට්ටමින් මෙන්ම පුළුල් සමාජි වෙනසක් තුළින් ජනතාවගේ පරිවර්තනීය වෙනසක් මූලිකවම සිදු විය යුතු බව මෙහිදි ඇය අවධාරනය කළා. ඒ අනුව සමාජ තත්වය ඉහල නැංවීම, පරිසර සුරක්ෂිතතාව සහ සාරධර්ම යන නිර්ණායක යටතේ මෙම ජාතික වැඩසටහන ක්‍රියාත්මක කෙරේ.

ජනතාවගේ හැසිරීමේ වෙනසක් ඇතිකරමින් ආදර්ශමත් වීම සහ ඒ හරහා යහ සාධකයන්ට ජනතාව පෙළඹවීම මෙම වැඩසටහනෙහි ප්‍රධාන අරමුණයි. පුද්ගලයා ස්වයං විනයක් තුළින් යහපත් , සාධාරණ, සාමකාමී පොහොසත් රටක් නිර්මාණය කිරීම සඳහා සිය දායකත්වය සැපයීමේ අවශ්‍යතාව පිළිබඳව මෙහිදි  අතිරේක දිස්ත්‍රික් ලේකම්තුමිය  වැඩිදුරටත් සාකච්ඡාවට ලක් කළේය.

මෙහි දී උපාය මාර්ගික ප්‍රවේශය යටතේ පුද්ගලයාගේ ජීවන තත්වය වෙනස් කිරීම, පරිසරය වෙනස් කිරීම යන සාධක  කෙරෙහි සහ  සංස්කෘතික , ආර්ථික, සමාජ, දේශපාලන ආදි අංශයන් හි සාධනීය වෙනසක් ඇති කිරීමට පෙළඹවීම ආදිය සිදු කෙරේ.

එමෙන්ම සමාජ තත්වය උසස් කරලීමේ කාර්යයයේ දී රාජ්‍ය නිලධාරීන් සඳහා සුවිශේෂි කාර්යභාරයක් පැවරේ. පරිසර සුරක්ෂිතතාව මෙන්ම , මානව සාරධර්ම ඉහළ නැංවිම මෙහි පුමුඛ කාර්යයන් ය. එම තත්වය ජනතාව තුළ ප්‍රවර්ධනය කිරිම සඳහා වන පෙළඹවීමේ කාර්යයයේ දී රාජ්‍ය නිලධාරියා ප්‍රමුඛ වේ.

එමෙන්ම පරිසර හිතකාමී සුරක්ෂිතතාව මෙන්ම ඉන් ඔබ්බට පවතින නිති රාමුවක් ඇති කිරීමත්, මිනිසුන්ගේ ආකල්පමය පරිවර්තනයන් , වංචාවෙන් හා දූෂණයෙන් තොර වගකීමෙන් හා වගවීමෙන් යුතු පුරවැසියන් බිහිකිරීමත් සඳහා ස්වයංදායකත්වය ලබා දීම පිළිබඳව ද මෙහි දි සාකච්ඡාවට ලක් කළා.

මෙම වැඩපිළිවෙළ ක්‍රියාත්මක කිරීමේ දී ගම් මට්ටමින් ග්‍රාමීය සභා  පිහිටුවයි. ඒ හරහා දිස්ත්‍රික් සභා පිහිටුවීම සිදු වේ. ඒවායෙහි ක්‍රියාකාරීත්වය  සෘජුවම ක්ලීන් ශ්‍රි ලංකා ලේකම් කාර්යාල සමඟ සම්බන්ධ කරයි. වඩා විනිවිද භාවයකින් යුතුව ක්‍රියාවට නැංවිමෙන් මෙම වැඩපිළිවෙළ හරහා  උසස් සමාජ ජීවිතයක් සහිත පොහොසත් රටක් බවට ශ්‍රී ලංකාව පරිවර්තනය කෙරේ.

ඒතුළින් “පොහොසත් රටක් - ලස්සන දිවයිනක්” නිර්මාණය කිරිම අපේක්ෂාවයි.

ඔබත් ශ්‍රි ලංකාවේ තිරසර  සමාජ සංස්කෘතික වෙනසක් ඇති කිරීම උදෙසා වන මෙම ජාතික මුල පිරිමට සමාජීයව , පාරිසරික හා සදාචාරාත්මක වගකීමෙන් හා වගවීමෙන් යුතු හවුල් කරුවෙකු වන්න...!!

 

"க்லீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் குறித்து புத்தளம் மாவட்ட செயலக அதிகாரிகளை அறிவுறுத்தும் நிகழ்வு........

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ், முழு சமூகத்திலும் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் "க்லீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் குறித்து புத்தளம் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி புபுதிகா எஸ். பண்டார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

க்லீன் ஸ்ரீலங்கா திட்டமானது, நிறுவன மட்டத்தில் போலவே பரந்த சமூக மாற்றத்தின் மூலமாகவும் மக்களிடையே உருவக  ரீதியான ஓர் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதனடிப்படையில், சமூக நிலைகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துதல் ஆகிய அளவுகோல்களின் கீழ் இந்த தேசிய திட்டம் செயற்படுத்தப்படும்.

மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியாக அமைந்து, அதன் ஊடாக மக்களை நற் செயல்களைச் செய்யத் தூண்டுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஒருவர் சுய ஒழுக்கத்தின் மூலம் சிறந்த, நியாயமான, அமைதியான மற்றும் வளமான நாட்டை உருவாக்குவதற்கு பங்களிப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து மேலதிக மாவட்டச் செயலாளர் மேலும் கலந்துரையாடினார்.

இதன்போது மூலோபாய அணுகுமுறையின் கீழ், தனிநபரின் வாழ்க்கை தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல், சுற்றுச்சூழலை மாற்றியமைத்தல் மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம், அரசியல் போன்ற துறைகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஊக்கப்படுத்தல் போன்ற காரணிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மேலும், சமூக அந்தஸ்தை மேம்படுத்தும் பணியில் அரச அதிகாரிகளுக்கு சிறப்புப் பங்கு உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித விழுமியங்களை மேம்படுத்துதல் ஆகியவை இங்கு முதன்மையான பணிகளாகும். அந்த சூழ்நிலையை மேம்படுத்த மக்களை ஊக்குவிப்பதில் அரச உத்தியோகத்ரானவர் முன்னணி பங்கு வகிக்கிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தாண்டிய ஒரு சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல், மக்களின் மனப்பான்மையில் மாற்றம், மோசடிகளும் ஊழல்களுமற்ற கடமையுணர்வும் வகைப்பொறுப்புக் கூறக் கூடிய குடிமக்களை உருவாக்க தமது பங்களிப்பினை வழங்குதல் போன்றவையும் கலந்துரையாடபட்டன.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதில், கிராம மட்டத்தில் கிராம சபைகள் நிறுவப்படும். அதன் மூலம், மாவட்ட மன்றங்கள் நிறுவப்படும். அவர்களின் செயற்பாடுகளானது நேரடியாக க்லீன் ஸ்ரீலங்கா செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிக வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது, இலங்கை தேசத்தை உயர்ந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட ஒரு வளமான நாடாக மாற்றும்.

"வளமான நாடு - அழகான தீவு" ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இலங்கையில் நிலையான சமூக-கலாச்சார மாற்றத்தை உருவாக்கும் இந்த தேசிய முயற்சியில் நீங்களும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக கடமையுணர்வுள்ள வகைப்பொறுப்புக்கூறக் கூடிய பங்குதாரர்களாகுங்கள்...!!

475265730 1122660692983408 5033980669445934302 n  475280848 1122661599649984 1607120354824661800 n

475322187 1122662006316610 5113080026343448248 n  475310798 1122662126316598 8208619086826378908 n