වර්ෂ 2003 සැත්තැම්බර් මස 01 වන දින ශ්‍රි ලංකා පරිපාලන සේවයට එක්වන වයි.අයි.එම්.සිල්වා මහතා පුත්තලම දිස්ත්‍රික්කයේ නව දිස්ත්‍රික්  ලේකම්/ දිසාපති  ලෙස අද දින (2025.09.01)රාජකාරි ආරම්භ කළේය.

2004 වර්ෂයේ දි අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ   නොච්චියාගම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සහකාර ප්‍රාදේශීය ලේකම්වරයා  ලෙස සේවය කරන ඒ මහතා 2007 දී ප්‍රාදේශීය ලේකම් තනතුරට පත්වන අතර  අනතුරුව 2012 වර්ෂයේ දී ගම්පහ දිස්ත්‍රික්කයේ මිරිගම ප්‍රාදේශීය ලේකම් වරයා ලෙස ස්ථානමාරුවීම් ලබයි.

එමෙන්ම වර්ෂ 2020 දි මුදල් අමාත්‍යාංශයේ කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුවට ස්ථානමාරුවීම් ලබන ඒ මහතා 2021 ජනවාරි මාසයේ දී  ශ්‍රී ලංකා රේගු දෙපාර්තමේන්තුවේ  අධ්‍යක්ෂ, ගුවන් තොටුපල රේගු  ලෙස උසස්වීම් ලැබීය.

ඉන් අනතුරුව ඒ මහතා 2024 වර්ෂයේ දී රජයේ කර්මාන්ත ශාලාවේ අධ්‍යක්ෂ ( පාලන) ලෙස රාජකාරි අරඹන අතර එම වසරේ සැත්තැම්බර් මස ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්‍රේණියට උසස්වීම් ලබයි. අනතුරුව එම වසරේම  දෙසැම්බර් මස කර්මාන්ත අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම් (සංවර්ධන) ලෙස උසස්වීම් ලබා 2025 අගෝස්තු 31 දින දක්වා එම අමාත්‍යාංශයේ රාජකාරි ඉටුකළේය.

වසර 22ක පරිපාලන සේවයේ අත්දැකීම් සපිරි වයි.අයි.එම්.සිල්වා මහතා ශ්‍රි ලංකා කැළණිය විශ්ව විද්‍යාලයේ මානව සම්පත් කළමණාකරණ විශේෂවේදී උපාධිධරයෙකු වන අතර නුවරඑළිය ගාමිණි මධ්‍ය මහා විද්‍යාලයේ ආදි ශිෂ්‍යයෙකි.

 

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக திரு. வை.ஐ.எம். சில்வா அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றார்.....

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவையில் இணைந்த திரு. வை.ஐ.எம். சில்வா அவர்கள், இன்று (2025.09.01) புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபராக கடமைகளைத் பொறுப்பேற்றார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நொச்சியாகம பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக 2004 ஆம் ஆண்டு பொதுச் சேவையில் இணைந்தார். 2007 ஆம் ஆண்டு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் 2012 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றார்.

2020 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார், மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை சுங்கத் துறையின் துணை பணிப்பாளராக பணியாற்றினார். மேலும் 2024 ஆம் ஆண்டு விமான நிலைய சுங்க பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார்.

அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டு அரச தொழிற்சாலையின் பணிப்பாளராக (நிர்வாகம்) கடமைகளைத் பொறுப்பேற்றதுடன்  அதே ஆணடில் செப்டம்பர் மாதத்தில் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார். பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில்  தொழில்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) பதவி உயர்வு பெற்றார், மேலும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை அவ்வமைச்சில் பணியாற்றினார்.

நிர்வாக சேவையில் 22 ஆண்டுகள் அனுபவமுள்ள திரு. வை.ஐ.எம்.சில்வா அவர்கள், இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் விசேட பட்டத்தை பெற்றுள்ளார்’ மேலும் நுவரேலியா காமினி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

 

Mr. Y.I.M. Silva commences duties as the new District Secretary of Puttalam....

Mr. Y.I.M. Silva, who joined the Sri Lanka Administrative Service on 01st September 2003, commenced his duties as the new District Secretary/Government Agent of the Puttalam District today (2025.09.01).

He joined the public service in 2004 as the Assistant Divisional Secretary of the Nochchiyagama Divisional Secretariat in the Anuradhapura District. He was appointed as the Divisional Secretary in 2007 and was subsequently transferred as the Divisional Secretary of Mirigama in the Gampaha District in 2012.

 He was also transferred to the Department of Management Services of the Ministry of Finance in 2020 and held the position of Deputy Director of the Sri Lanka Customs Department from January 2021 and was promoted to Director of Airport Customs in 2024.

Thereafter, he commenced duties as Director (Administration) of the Department of Government Factory in 2024 and was promoted to the Special Grade of the Sri Lanka Administrative Service in September of that year. Subsequently, in December of the same year, he was promoted to Additional Secretary (Development) of the Ministry of Industries and served in that Ministry until 31 August 2025.

With 22 years of experience in administrative service, Mr. Y.I.M. Silva holds a Bachelor of Science in Human Resource Management from the University of Sri Lanka Kelaniya and is an alumnus of Gamini Central College, Nuwara Eliya.

IMG 20250901 WA0028    IMG 20250901 WA0027

 IMG 20250901 WA0026   IMG 20250901 WA0025

IMG 20250901 WA00211   IMG 20250901 WA00221

 IMG 20250901 WA0019