தொலைநோக்கு
பௌதீக மற்றும் மனித வளங்களை பயனுடைய விதத்தில் வழி நடாத்துவதன் மூலம் மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தல்
செயற்பணிப் பிரகடனம்
மாவட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னிறுத்தி நிறுவனங்களையும் வளங்களையும் பயனுடைய விதத்தில் வழி நடாத்தும் ஒரு கூட்டிணைப்பின் மூலம் மக்களின் தேவைகளை வினைத்திறனுடனும், நீதியாகவும், நேர்மையாகவும் நட்புறவுடனும் நிறைவேற்றல் எங்கள் பணியாகும்அறிமுகம்
இலங்கையின் வடமேல் மாகணத்தில் அமைந்துள்ள நிருவாக மாவட்டமான புத்தளம் வடக்கே மன்னார் மாவட்டத்தை எல்லையாகக் கொண்ட மோதரகம ஆற்றினாலும், கிழக்கே அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களினாலும், தெற்கே கம்பஹா மாவட்டத்தினை எல்லையாகக் கொண்ட மா ஓயாவினாலும் மேற்கே இந்து சமுத்திரத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
இம்மாவட்டமானது நன்னீர் நிலைகள் அடங்கலாக நீளத்தால் 3013 சதுர கி. மீ. நிலப்பரப்பினையும் 288 கி.மீ. கரையோரத்தினையும் கொண்டுள்ளது.. மாவட்டத்திற்கூடாக ஊடறுக்கும் தெதுறு ஓயா, மீ ஓயா,பத்துலு ஓயா மற்றும் ரதம்பல ஓயா ஆகியன பலவழிகளிலும் மாவட்டத்தினைச் செழிப்புறச் செய்வதில் பெருமளவு பங்காற்றுகின்றன
இம்மாவட்த்தில் 03 வகையான காலநிலை வலயங்கள் காணப்படுகின்றன. அவை மா ஓயாவிலிருந்து தெதுறு ஓயாவுக்கிடயே ஈர வலயமாகவும் தெதுறு ஓயாவிலிருந்து மாவட்டத்தின் வடக்கு எல்லைவரை மிகவும் வரண்ட வலயமாகவும் கல்பிட்டி தீபகற்பத்திலுள்ள மணல் மற்றும் மணற் திட்டுகளால் உள்ள பிரதேசம் மிதமான வரட்சியினை கொண்டதாகவும் அமைந்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி
இலங்கையில் ஆரம்ப குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முதல்வராக இருந்த விஜயன் மற்றும் அவனுடைய சகாக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கியது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பபன்னி பிரதேசத்திலேயேயாகும் என வரலாறுகள் கூறுகின்றன. மேலும் விஜயன் அரசனாவதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் குவேணி என்பவளின் இருப்பிடமும் இப்பிரதேசத்திலேயே இருந்துள்ளது. பிற்காலத்தில் விஜய அரசர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 'புத்தகச்சான' எனும் இளவரசியை திருமணம் செய்ததால் அங்கிருந்து சென்ற குவேணி தோணிகல எனும் பிரதேசத்தில் வாழ்ந்ததாக கதைகளில் கூறப்படுகின்றது.. இப் பிரதேசத்திலேயே இலங்கையின் மிக நீண்ட கல் வெட்டும் காணப்படுகின்றது.. இது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் வணாத்தவில்லு செயலாளர் பிரிவில் பொன்பரப்பி எனும் பிரதேசம் அமைந்துள்ளதுடன் அங்கு கி.மு 2000 ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையிலும் இப்பிரதேசத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் கோயிலானது இந்து, பௌத்த மக்களால் கௌரவிக்கப்படும் புனித தலமாகும். வரலாற்றின் படி தம்பதெனிய இராச்சிய யுகத்தில் குறிப்பிடப்பட்ட முனிசோம விகாரை இதுவாகுமென ஒரு கூற்றும் உள்ளது. ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலக பிரிவில் தெதுறு ஓயாவிற்கருகில் அமைந்திருக்கும் வெஹெரபெந்தி காட்டுப் பிரதேசத்தில் புராதனப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கத்தோலிக்கர்களால் கௌரவிக்கப்படும் புராதன வழிபாட்டுத்தலமான தலவில புனிதஆனா தேவாலயம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலக பிரிவிலேயே அமைந்துள்ளது.
பொருளாதார பின்னணி
தெங்கு முக்கோண பிரதேசத்திற்குட்பட்ட தெதுறு ஓயா மற்றும் மா ஓயா வரையிலான பிரதேசமானது தெங்கு உற்பத்தியில் சிறந்து விளங்குவதடன் அதற்கான சிறந்த மண்வளமும் இங்கு காணப்படுகிறது.
புராதன அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தப்போவ, தினிபிட்டிய, கரவிட்ட, கட்டுப்பொத, கொட்டுக்கச்சிய மற்றும் இங்கினிமிட்டியஆகிய நீர்பாசண முறைமையின் கீழ் இன்றும் கூட நெற் செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதோடு நீர்பாசன முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கபட்ட நீலபெம்ம மற்றும் ரதவிபெந்தி கால்வாயினைச் சார்ந்தும் நெற்ச் செய்கை செய்யப்படுகிறது.
வணாத்தவில்லு பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை பெருமளவில் மேற் கொள்ளப்படுகிறது. இப்பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள எலுவன்குளம் பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான சுண்ணாம்பு மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.
வென்னப்புவையிலிருந்து கற்பிட்டி வரையான கடல் பிரதேசத்தில் மீன்கள் , அட்டைகள், சிப்பிகள், போன்ற கடல் சார் வளங்கள் நிறைந்து காணப்படுவதோடு, மீன்பிடித் தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்பிரதேசத்திலுள்ள மண்வளம் மரக்கறிச்செய்கைக்கு உகந்ததாக காணப்படுகிறது.
உப்பு உற்பத்தியும் இம்மாவட்டதத்தில் சிறந்து விளங்குவதோடு இறால் வளர்ப்பும் பொருளாதார ரீதியாக இலாபமீட்டக்கூடிய தொழிலாக காணப்படுகிறது. புத்தளம் மாவட்டத்திட்குட்பட்ட சிறுகடலானது இறால் வளர்ப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதால் பெருமளவிலான அந்நிய செலாவனியை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
மாவட்ட செயலகம்
புத்தளம் நகர மத்தியில் மாவட்ட செயலகம் அமைந்துள்ளது. அதிகார பகிர்வு விடயத்தில் பெரும்பகுதி நிருவாக நடவடிக்கைகள் மாவட்ட செயலகத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. பல திணைக்களங்களின் கிளைகளும் இச்செயலக வளாகத்திலே இயங்குகின்றன. அவைகளாவன சமுர்த்தி அலுவலகம், தேர்தல்கள் அலுவலகம், கணக்காய்வு அலுவலகம், திட்டமிடல் அலுவலகம், புள்ளிவிபரவியல்அலுவலகம், மாகாணக் காணி அலுவலகம், மோட்டார் போக்குவரத்துக் கிளை, காணி உபயோகத் திட்டமிடல் கிளை , சமூகப் பாதுகாப்பு சபையின் கிளை, இலங்கை வங்கிக் கிளை மற்றும் உப தபாலகம் ஆகியனவாகும்.
புத்தளம் மாவட்டத்தின் அரசாங்க அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பெயர்ப்பட்டியல்
| No. | Name | From | To |
| 01 | ஜே. கோல்பில்ட் | 1855 | |
| 02 | டப். மொரிஸ் | 1856 | |
| 03 | டீ.சி பவர் | 1857 | 1862 |
| 04 | ஈ.எல். மிட்போர்ட் | 1863 | 1865 |
| 05 | ஈ. என். அத்தர்டன் | 1866 | 1868 |
| 06 | டப். டீ. மெக்ரெய்ட் | 1869 | 1870 |
| 07 | டப். டீ. வ்ரைட் | 1872 | |
| 08 | எல். எப். லைசிங் | 1873 | |
| 09 | ஏ. டப். வீ. பீட்டர்சன் | 1874 | |
| 10 | ஜே. பீ. ஏ பெய்லி | 1875 | |
| 11 | பீ .ஏ . டெம்லோர் | 1876 | 1883 |
| 12 | சீ. எம். லசிங்டன் | 1884 | |
| 13 | ஏ. ஆர். டோஷான் | 1885 | 1886 |
| 14 | சீ. எம். லசிங்டன் | 1887 | |
| 15 | ஆர். ரெய்ட் | 1888 | 1891 |
| 16 | சீ. ஈ. டி. பென்னிகுவிக் | 1892 | 1893 |
| 17 | எச். எச். கெமரோன் | 1894 | |
| 18 | எஸ். ஹப்டொன் | 1895 | 1897 |
| 19 | ஈ. டி. நொய்ஸ் | 1898 | |
| 20 | எச். டப். எப். சி. பொடிஹெர்ட்ஸ் | 1899 | |
| 21 | பீ . கொன்ஸ்டன்டீன் | 1902 | |
| 22 | பீ. எப். குக்சன் | - | |
| 23 | எச். ஆர். ப்ரிமோன் | 1903 | |
| 24 | எப். போவிஸ் | 1904 | 1905 |
| 25 | ஆர். என். தெய்ன் | 1906 | 1907 |
| 26 | ஏ. சி. வோல்நட் | 1908 | 1909 |
| 27 | ஈ. பீ. அலெக்ஸாண்டர் | 1910 | 1912 |
| 28 | ஜோன் ஸ்கோட் | 1912 | 1913 |
| 29 | எச். டப். கொட்ரின்டன் | 1914 | |
| 30 | சி. எச். கொலோன்ஸ் | 1915 | |
| 31 | டப். ஈ. வெய்ட் | 1916 | 1918 |
| 32 | பீ. எப். ரோசெட் | 1919 | |
| 33 | டப். கே. எச். கெம்பெல் | 1920 | 1921 |
| 34 | எம். வை. அவ்போல்ட் | 1922 | |
| 35 | டப். கே. எச். கெம்பெல் | 1923 | |
| 36 | ஆர். எச். வைட்ஹோன் | 1924 | 1925 |
| 37 | சீ. எல். விக்ரமசிங்க | 1926 | 1928 |
| 38 | எஸ். எச். வாடிய | 1929 | |
| 39 | டப். ஜெ. எல். ரோஜர்சன் | 1930 | |
| 40 | வீ. குமாரசுவாமி | 1931 | |
| 41 | ஈ. ரொட்ரிகோ | 1932 | |
| 42 | ஏ. ஈ. கிறிஸ்டொபல்ஸ் | 1933 | 1936 |
| 43 | ஜெ. லய்ட் | 1937 | 1938 |
| 44 | ஆர். எம். மனிபெனி | 1939 | 1941 |
| 45 | ஜீ. எல். டீ. டேவிட்ஸன் | 1942 | 1943 |
| 46 | பீ. ஓ. பெர்ணான்டோ | 1944 | |
| 47 | டப். ஏ. டி. சில்வா | 1945 | 1947 |
| 48 | எம். ஸ்ரீகந்தா | 1948 | |
| 49 | ஏ. அருள்பிரகாசம் | 1949 | 1951 |
| 50 | சி. த பொன்சேகா | 1952 | |
| 51 | பி. ஆர். தேவராஜா | 1953 | 1955 |
| 52 | ஏ. எஸ். நவரத்தினராஜா | 1956 | 1959 |
| 53 | பீ. எம். ஸ்பார்க்ஸ் | 1960 | |
| 54 | கே. பி. திஸாநாயக்க | 1961 | |
| 55 | வீ. ராமநாதன் | 1962 | 1963 |
| 56 | டீ. ஏ. எல். லியூடோவைக் | 1963 | 1964 |
| 57 | ஏ. ஐ. மொஹிதீன் | 1965 | 1966 |
| 58 | எம். டீ. டப். அமரசேகர | 1966 | 1969 |
| 59 | பீ. பீ. புஞ்சிஹேவா | 1969 | 1972 |
| 60 | பி. எஸ். விஜேவீர | 1973 | |
| 61 | ஜி. பி. ராஜபக்ஸ | 1974 | 1977 |
| 62 | டப். ஜயமஹ | 1977 | |
| 63 | எம். சி.ஓ. ஈபர்ட் | 1977 | 1978 |
| 64 | எஸ். ஆர். வீரகோன் | 1978 | 1981 |
| 65 | ஆர். டப். பியசேன | 1981 | 1982 |
| 66 | எம். ஆர். பீ. மொல்லிகொட | 1982 | 1990 |
| 67 | டப். டி. எல். பெரேரா | 1990 | 1993 |
| 68 | கே. ஏ. பி. ஜெ. பீ . ஜயசேகர | 1993 | 1995 |
| 69 | கே. ஜயலத் | 1995 | 1996 |
| 70 | ஜெ. எம். டி. ஸ்ரீவர்தன | 1996 | 1998 |
| 71 | ஜெ. ஆர். திஸாநாயக்க | 1998 | 2003 |
| 72 | எச். எம். ஹேரத் | 2004 | 2007 |
| 73 | எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ | 2008 | 2015 |
| 74 | மஹிந்த செனவிரத்ன | 2015 | |
| 75 | என். எச். எம். சித்ரானந்த | 2016 | 2019.11.28 |
| 76 | எச். எம். எஸ். பீ. ஹேரத் (தற்காலிக) | 2019.12.01 | 2020.01.28 |
| 77 | எல். ஜே. எம். ஜீ. சந்திரசிறி பண்டார | 2020.01.29 | 2021.05.11 |
| 78 | கே. ஜீ. விஜேசிறி | 2021.06.17 | 2022.02.21 |
| 79 | எச். எம் .எஸ். பி. ஹேரத் | 2022.04.05 | இதுவரை |






